விஜய் ஆண்டனி நடித்த ரொமான்ஸ் திரைப்படமான ’ரோமியோ’ இன்று வெளியாகி உள்ள நிலையில் ரொமான்ஸ் படத்தில் விஜய் ஆண்டனி தேறினாரா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
திருமணத்திற்கு பிறகு மனைவியின் காதலை பெற போராடும் கணவன் குறித்த ஒன்லைன் கதை தான் இந்த ’ரோமியோ’. இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி குடும்பத்தின் கடன் சுமை காரணமாக அவர் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து அதன் பிறகு நாடு திரும்புகிறார். 35 வயது ஆகிவிட்ட நிலையில் அவர் திருமணம் குறித்து சிந்திக்க ஆரம்பிக்கவே தற்கால இளைஞர்களை போல தன்னை மாற்றிக்கொண்டு காதலில் இறங்க முடிவு செய்கிறார்
இந்த நிலையில் சென்னையில் சினிமாவில் கதாநாயகி கனவோடு வரும் மிருணாளினி தனது நண்பர்களுடன் வசித்து வந்த நிலையில் பெற்றோர்களிடம் ஐடியில் வேலை செய்வதாக பொய் கூறி சினிமா வாய்ப்பை தேடி வருகிறார். இந்த நிலையில் தான் தற்செயலாக விஜய் ஆண்டனி அவரை பார்த்து, திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஒருவழியாக திருமணம் நிச்சயதார்த்தமும் நடக்கிறது. திருமணத்திற்கு பின் அவர் தனது மனைவியின் காதலை பெற வேண்டும் என்று முயற்சிக்கும் நிலையில் அவரது காதலை பெற்றாரா என்பது தான் இந்த படத்தின் கதை
மனைவியின் காதலை பெற வேண்டும் என போராடும் கணவன் பற்றிய கதை ஏற்கனவே பல திரைப்படங்களில் வந்த நிலையில் இந்த படத்தில் சற்று வித்தியாசமாக திரைக்கதை விட அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமணத்திற்கு பிறகு கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் கதையும் தமிழ் சினிமாவுக்கு புதிது அல்ல என்ற நிலையில் இந்த இரண்டையும் கலந்து எடுக்கப்பட்டு உள்ள இந்த படம் தான் ரோமியோ.
புதிய காட்சிகள் எதுவும் இல்லாததால் ஒரு அளவுக்கு மேல் பொறுமையை சோதிக்கின்றன. விஜய் ஆண்டனி மிகவும் இயல்பாக நடித்திருந்தாலும் அவர் இயல்பாக இருக்கிறாரா அல்லது படத்திற்காக ஓவர் ஆக்டிங் செய்கிறாரா என்பதை வித்தியாசப்படுத்தி பார்க்க முடியவில்லை,
மிருணாளினி நன்றாக தேறி உள்ளார், கோபம் காட்டும் காட்சிகளிலும் ஏமாற்றத்தை காட்டும் காட்சிகளிலும் அவரது நடிப்பு சூப்பர். அவரது லீலா கேரக்டர் வலுவில்லாததால் அவரது நடிப்பும் வேஸ்ட் ஆகி விடுகிறது
பரத் தனசேகர் இசையில் ஓரிரு பாடல்கள் மட்டுமே நன்றாக இருந்தாலும் பின்னணி இசை சூப்பராக உள்ளது. விஜய் ஆண்டனிக்கு ஆலோசனை சொல்லும் யோகி பாபு கேரக்டர், மற்றும் வி டிவி கணேஷ் கேரக்டர் செய்யும் காமெடி எதுவுமே எடுபடவில்லை என்பது பெரும் சோகமாகவும் உள்ளது.
கதை தேர்வு மற்றும் நாயகன் நாயகி கேரக்டர்களை இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இந்த ரோமியோ உண்மையான ரோமியோவாக இருந்திருக்கும்
Listen News!