ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த ’டியர்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் அப்படியே ’குட்நைட்’ படத்தின் காப்பி பேஸ்ட் போல் இருக்கிறது என்று பலர் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சிறுவயதில் இருந்தே குறட்டை விடும் பழக்கம் இருக்கும் நிலையில் பெண் பார்க்க வரும் பலர் அதை விசாரித்து திருமணம் செய்யாமல் பயந்து ஓடி விடுகின்றனர். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் ஒரு செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் அவருக்கு 8 மணி தூக்கம் மிகவும் தேவை என்ற நிலையில் இருக்கிறார்.
ஒரு சின்ன சத்தம் கேட்டால் கூட தூக்கத்திலிருந்து எழுந்து விடும் ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் குறை தெரியாமல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை இவர்களது வாழ்க்கையில் என்னென்ன புயலை கிளப்புகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டர் தான் முன்னிறுத்தும் வகையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது திறமை வீணடிக்கப்பட்டு அவரது கேரக்டர் டம்மி ஆக்கப்படுவதிலிருந்து இந்த படம் ஆரம்பத்திலேயே சறுக்கி விடுகிறது. செய்தி வாசிப்பாளராக வரும் ஜிவி பிரகாஷ் கேரக்டர் மேலோட்டமாக அமைக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம்தான்.
காளி வெங்கட் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் அவரது மனைவியாக வரும் நந்தினி சுமாரான நடிப்பையே தருகிறார். ஐஸ்வர்யராஜ் தாயாராக வரும் கீதா கைலாசம் பத்தோடு பதினொன்றாகவும் ரோகிணி, தலைவாசல் விஜய் உள்பட பல திறமையானவர்கள் இந்த படத்தில் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் -ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பதி இடையே குறட்டையால் ஏற்படும் பிரச்சனையை அழுத்தமான காட்சிகளால் சொல்லவில்லை. ஒவ்வொரு காட்சியும் ஆழமாகவும் இல்லை. திடீரென விவாகரத்து என்று இவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. தலைகால் புரியாமல் சரியான திரைக்கதை இல்லாமல் இந்த படம் நகர்வது பார்வையாளர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
’குட்நைட்’ படத்தில் இந்த பிரச்சனை மிகவும் ஆழமாக சொல்லப்பட்டிருப்பது மணிகண்டனுக்கு இருக்கும் குறட்டை பிரச்சனையை அவரது மனைவி கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள முயற்சிப்பதும் மனைவி கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மணிகண்டன் கொஞ்சம் கொஞ்சமாக குறட்டையை நிறுத்த முயற்சி செய்வதுமான காட்சிகள் அழுத்தமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் சுத்தமாக அப்படியான காட்சிகளை இல்லை.
’குட் நைட்’ படத்தின் காப்பி பேஸ்ட் போல் இருந்தாலும் அந்த படத்தில் உள்ள அழுத்தமான திரைக்காதை அமைப்பு இந்த படத்தில் இல்லை என்பதால் இந்த படம் மிகவும் வீக் என்றுதான் சொல்ல வேண்டும்.
Listen News!