• Jan 19 2025

பிளாக் அண்ட் ஒயிட்டில் போட்டி போட்டு கிளாமர்.. நயன்தாரா, சமந்தாவுக்கு என்ன ஆச்சு?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் ஒரே மாதிரியான பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களை கிளாமருடன் பதிவு செய்திருப்பதை பார்த்து இருவருக்கும் என்ன ஆச்சு என்று கமெண்ட் பகுதியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்பதும், முன்னணி நடிகை சமந்தா என்பதும் இருவரும் பல வெற்றி திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்கள் என்பதும் தெரிந்தது. நயன்தாரா திருமணம் ஆகி குடும்பம் என செட்டில் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அவர் பிஸியாக இருக்கிறார்.  அதேபோல் சமந்தா திருமணமாகி விவாகரத்து பெற்று வந்தாலும் அவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இருவருக்குமே இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் உள்ளனர். குறிப்பாக நயன்தாராவுக்கு 8 மில்லியன், சமந்தாவுக்கு 34 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் இருவரும் அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் சில மணி நேர இடைவெளியில் பிளாக் அண்ட் ஒயிட்டில் கிளாமர் காஸ்ட்யூம் அணிந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இருவருக்கும் என்ன ஆச்சு? ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரே காஸ்ட்யூமில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த இரண்டு புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement