• Jan 19 2025

'நினைத்தேன் வந்தாய்’ சீரியலில் ஒரு ‘இவருக்கு பதில் இவர்’.. பஞ்சாயத்து செய்ய நடிகை முடிவு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ஜீடிவியில் ஒளிபரப்பாகி வரும் ’நினைத்தேன் வந்தாய்’ சீரியலில் ஒரு இவருக்கு பதில் இவர்’ என்று விரைவில் போடப்படும் டைட்டில் வர இருப்பதாகவும் ஆனால் இதற்கு அந்த கேரக்டரில் நடித்து வரும் நடிகை பஞ்சாயத்து செய்வதால் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’நினைத்தேன் வந்தாய்’ என்பதும் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்த இந்த சீரியல் இப்போதுதான் விறுவிறுப்பை கொண்டுள்ளது என்பது தெரிந்தது. கணேஷ் வெங்கட்ராமன், கீர்த்தனா, ஜாஸ்மின் ரூத் உள்பட பலர் நடித்து வரும் இந்த சீரியலில் இருந்து தற்போது ஜாஸ்மின் ரூத் நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் ஒடிசாவில் டிவி சீரியலில் பிரபலமாக இருந்த நிலையில் ’நினைத்தேன் வந்தாய்’ தயாரிப்பு குழுவினர் தான் ஒடிசா போய் இவரை கட்டாயப்படுத்தி தமிழுக்கு அழைத்து வந்தார்கள். இவருக்கு சமூக வலைதளத்தில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருப்பதால் அதன் மூலம் சீரியல் பிரபலமாகிவிடும் என்ற கணக்கை வைத்து தான் இவர் கமிட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் சீரியல் தொடங்கி மூன்று மாதமே ஆகி உள்ள நிலையில் ஜாஸ்மின் ரூத் கேரக்டர் எதிர்பார்த்த அளவு பிரபலமாகவில்லை என்பதை அடுத்து அந்த நடிகையை மாற்ற முடிவு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜாஸ்மின் முகம் தமிழுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதால் இந்த சீரியல் ஹிந்தி சீரியல் போல் இருக்கிறது என்ற விமர்சனம் வந்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை வலுக்கட்டாயமாக இந்த சீரியலில் நடிக்க வைத்துவிட்டு தற்போது நீக்கப்பட்டால் தன்னுடைய இமேஜ் என்ன ஆகும் என்றும் இந்த சீரியல் இருந்து தன்னை நீக்கினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் ஜாஸ்மின் தரப்பு கூறுவதாக தெரிகிறது. எனவே இவருக்கு பதில் இவர் என்று ஜாஸ்மின் நீக்கும் நிலைமை வந்தால் நடிகையின் தரப்பிலிருந்து பஞ்சாயத்து எழ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement