அச்சு அசல் த்ரிஷாவைப் போல் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்… வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்..!

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுக காலத்திலிருந்து இன்றுவரை முன்னணி நட்சத்திர நாயகியாகவே வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகையே தன்னுடைய நடிப்பினால் கட்டிப் போட்டிருக்கின்றார்.

மேலும் இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னர் சென்னை அழகியாக 1999-ஆம் ஆண்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் வெளியாகிய படங்களாக ‘சாமி, கில்லி, மௌனம் பேசியதே, அலை, நந்து, பீமா’ எனப் பல படங்களையும் குறிப்பிடலாம். அதுமட்டுமன்றி பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘ராங்கி’ ஆகிய படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. இப்படங்களில் மணி ரத்னத்தின் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷாவை காணப் பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவரின் போஸ்டர் வெளியாகி பலரதும் வாழ்த்து மழையினைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ டீசர் மூலம் மறுபடியும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை த்ரிஷா.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் பிரபலமான சுருதி செய்த ஒரு விடயமானது சமூக வலைத்தளங்களில் அதிகளவு பேசப்பட்டு வருகின்றது. அதாவது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் குந்தவை த்ரிஷாவை போன்று வேடமணிந்து அச்சு அசல் அப்படியே மாறியுள்ளார் பிக்பாஸ் சுருதி.

இவ்வாறாக தன்னை அலங்கரித்துக் கொண்டு போட்டோ ஷூட் நடத்திய சுருதி அந்தப் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கின்றார். இப்புகைப்படங்களானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்