• Jan 19 2025

இதுல யாரு உண்மையான குரங்கு.. நீங்களே கலாய்ச்சிகிட்டா நாங்க என்ன கமெண்ட் போடுறது.. குரேஷியிடம் கேள்வி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்குடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’இதில் யார் உண்மையான குரங்கு’ என்று கமெண்ட் செய்திருப்பதை அடுத்து நெட்டிசன்கள் ’உங்களை நீங்களே கலாச்சிக்கிட்டா நாங்க என்ன கமெண்ட் போடுவது’ என்று காமெடியுடன் பதிவு செய்து வருகின்றனர்.

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான குரேஷி அதன் பின்னர் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் என்பதும் அது மட்டும் இன்றி சில சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்தது.

மேலும் வெளிநாடுகளுக்கு சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் அவர் தற்போது பிஸியாக இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி’ சீசன் 5ல் கோமாளியாக அவர் பங்கேற்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



வரும் 27 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக தன்னை தயார் செய்து கொண்டிருக்கும் குரேஷி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில சுவாரஸ்யமான பதிவுகளை செய்வார் என்பதும் அவை வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்று முன் அவர் தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை பதிவு செய்து அதில் குரங்கை கட்டி பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் அதில் கேப்ஷனாக ’இதில் யார் உண்மையான குரங்கு என்று கண்டுபிடிங்கள்,  உண்மையிலேயே இந்த குரங்கு என் மேல் மிகுந்த அன்பு செலுத்தியது’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து உங்களை நீங்களே கலாய்த்து கொண்டால் நாங்கள் எப்படி உங்களை கலாய்த்து கமெண்ட் செய்வது என்று காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement