Monday, August 8, 2022

தந்தை முரளியின் பெயரை காப்பாற்றுவாரா அதர்வா..? ‘குருதி ஆட்டம்’ முதல் நாள் வசூல் இவ்வளவு தானா..?

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அதர்வா. இவர் பிரபல நடிகரான முரளியின் மகன் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. தந்தையை போன்றே இவரும் சினிமாவில் காலடி எடுத்து வைத்து ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார். தந்தையளவிற்கு இல்லாவிட்டாலும் இவரின் நடிப்பை ரசிப்பதற்கு என்று இவருக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

அந்த வகையில் தற்போது அதர்வா நடிப்பில் உருவாக்கியுள்ள படமே ‘குருதி ஆட்டம்’. ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்படமானது நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இதில் அதர்வாக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தை ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார்.

குறிப்பாக 2017-ஆம் ஆண்டு வெளியாகி இருந்த ‘8 தோட்டாக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவரே ஸ்ரீ கணேஷ். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் தற்போது இயக்கியுள்ள திரைப்படமே ‘குருதி ஆட்டம்’.

மேலும் இப்படமானது மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. அதில் அதர்வா முரளி ஒரு கபடி வீரர் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். அதேபோன்று பிரியா பவானி ஷங்கர் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இவர்களோடு இணைந்து ராதா ரவி, ராதிகா சரத்குமார் மற்றும் வாட்சன் சக்ரவர்த்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படமானது தற்போது வெளியாகி சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் முதல் நாள் முடிவில் இப்படமானது ரூ. 80 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் நடிப்பில் அதர்வாவும் முரளியை போன்று சாதனை படைப்பாரா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்