• Jan 18 2025

தங்கலான்லயும் புது சம்பவம் இருக்கு! ஓபனாக சொன்ன ஜிவி பிரகாஷ்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

பொதுவாக ஒவ்வொரு நடிகர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் மற்றும்  இயக்குனர்கள்  இணைந்து நடிக்கும் திரைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது எனலாம். 


அவ்வாறே சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் தங்கலானான் திரைப்படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. ஜிவ் பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை விக்ரம் , பா ரஞ்சித் , ஜிவி பிரகாஷ் கூட்டணியே பெரிய அளவில் பேசுபொருளாக மாற்றியுள்ளது. 


இந்த நிலையிலேயே இதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது x தள பக்கத்தில் " தங்கலான் திரைப்படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நடந்து வருகின்றது. இது மிகவும் தனித்துவமாகவும் , சிறப்பானதாகவும் இருக்கும் , விரைவில் இதை உங்களுக்கு திரையில் காட்ட ஆவளாக உள்ளேன்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தொடர்ந்தே ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசைக்கு இணையாக இது இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. 


Advertisement

Advertisement