தளபதி விஜய் நடிக்கும் ஒரே ஒரு திரைப்படத்திலாவது நடிக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்றும் பல நடிகைகள் காத்திருக்கும் நிலையில் நடிகை ஸ்ரீலீலா விஜய்யின் ’கோட்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாது என்று கூறியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ஸ்ரீலீலா அமெரிக்காவை சேர்ந்தவராக இருந்தாலும், தற்போது தெலுங்கு படங்களில் கலக்கி வருகிறார் என்பது சமீபத்தில் வெளியான மகேஷ்பாபுவின் ’குண்டூர் காரன்’ திரைப்படத்தில் இவர் சூப்பராக நடித்திருந்த நிலையில் தற்போது அவர் பவன் கல்யாண் நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் இவருக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் ஒரு ஐட்டம் பாடலிலும் நடிக்க முதலில் ஸ்ரீலீலாவிடம் தான் இயக்குனர் வெங்கட் பிரபு அணுகியதாகவும், ஆனால் அவர் நாயகி ஆக மட்டும் தான் நடிப்பேன், ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது. அதன் பின்னர் தான் த்ரிஷா அந்த கேரக்டரில் நடித்ததாகவும் அவருடைய காட்சிகளை படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் விஜய் படத்தை வேண்டாம் என்று கூறிய ஸ்ரீலீலா, தற்போது அஜித் நடிக்க இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ’குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவில்லை, ஆனால் அதே நேரத்தில் அந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் அவருடைய கேரக்டர் தான் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுவதால் தான் அந்த கேரக்டரில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது.
மொத்தத்தில் விஜய் படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டு அஜித் படத்தை அவர் ஒப்புக் கொண்டிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!