• Jan 19 2025

ஓவர் சீன் போடும் தங்கமயில்.. மீனா பிடித்த பாயிண்ட்.. ராஜியின் அதிரடியால் ஆடிப்போன முத்துவேல் குடும்பம்.. !

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்றைய எபிசோடில்  கைதான தனது மகன்கள் மூவரையும் விடுவிக்க வழக்கறிஞர் மூலம் பாண்டியன் முயற்சி செய்ய, ஆனால் இன்ஸ்பெக்டர் எப்.ஐ.ஆர் போட்டுக் கொள்கிறோம், நீங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இதனை அடுத்து பாண்டியனின் வழக்கறிஞர் முத்துவேல் - சக்திவேல் குடும்பத்தின் மீது ராஜி புகார் அளித்தால் அவர்கள் தங்களுடைய புகாரை வாபஸ் பெற்று விடுவார்கள் என்று ஐடியா கொடுக்க, அதன்படி ராஜி புகார் கொடுக்கிறார். மாப்பிள்ளை கைதான விஷயத்தை கேள்விப்பட்டு வரும் தங்கமயில் குடும்பம் ஓவர் சீன் போட, மீனா மீண்டும் சந்தேகம் கொள்ள, மீனாவின் சந்தேகம் இப்போது ராஜிக்கும் ஏற்பட்டுள்ளது போன்ற காட்சிகள் உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்து வருகிறது என்பதும் குறிப்பாக சரவணனுக்கு தங்கமயிலை திருமணம் செய்ய நிச்சயம் செய்திருக்கும் நிலையில் திடீரென ஏற்பட்ட அடிதடி காரணமாக சரவணன் மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தங்கள் மகன்களை விடுவிக்க இன்ஸ்பெக்டரிடம் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் முடியாத காரணத்தினால் வழக்கறிஞர் திடீரென ஒரு ஐடியா கொடுக்கிறார். ராஜியை அவரது அண்ணன் அடித்தது உண்மைதானே, அதனால் ராஜி மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் புகார் கொடுத்தால், கண்டிப்பாக அவர்கள் பதட்டமாகி தங்களுடைய புகாரை வாபஸ் வாங்கிவிடுவார்கள், அல்லது மூவரையும் விடுதலை செய்வதென்பது ரொம்ப கஷ்டம் என்று கூற முதலில் தயங்கும் பாண்டியன் அதன் பின் மீனா சரியான பாயிண்ட்டை சொன்னதை அடுத்து சம்மதிக்கிறார்.

இதனை அடுத்து பாண்டியன் மற்றும் ராஜி தங்களை அடித்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இந்த புகார் கொடுத்த தகவல் அறிந்ததும் சக்திவேல் - முத்துவேல் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. ஒரு பெண் கொடுத்த கம்ப்ளைன்ட் தான் சக்தி வாய்ந்தது என்றும் நம்முடைய கம்பளைண்ட் பெரிதாக எடுபடாது என்றும் அவர்கள் எளிதில் வெளியே வந்து  விடுவார்கள் நாம்தான் சிக்கிக் கொள்வோம் என்று சக்திவேல் மெச்சூரிட்டியாக பேசியதை அடுத்து மூவரும் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் புகாரை வாபஸ் ஏற்று கொள்கின்றனர்.

இதனை அடுத்து ராஜியிடம் உங்களுடைய புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கூறும் நிலையில் ராஜி ஆழ்ந்த யோசனையுடன் இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது. ராஜி புகாரை வாபஸ் வாங்குவாரா? அல்லது அதிரடியாக வேறு ஏதேனும் முடிவு எடுப்பாரா, மாப்பிள்ளை கைதானதால் ஓவர் சீன் போட்ட தங்கமயில் மற்றும் அவரது அம்மாவை சந்தேகப்படும் மீனா, இது குறித்து தங்கள் குடும்பத்திடம் பேசுவாரா? போன்றவைகளை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement