• Jul 27 2024

கொளுத்துங்கடா வெடிய..!! எதிர்நீச்சல் சீரியலை வீழ்த்திய சிறகடிக்க ஆசை! முதலிடத்தில் கார்த்திகை தீபம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவை பிரபலமாக காணப்படுகின்றன.

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதன் காரணமாக குறித்த சேனல்கள் போட்டி போட்டு புதிய புதிய சீரியல், நிகழ்ச்சிகளை களம் இறக்கி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் எதிர்பாராத விதமாக சன் டிவி சீரியலை பின்னுக்குத் தள்ளி விஜய் டிவி முன்னேறியுள்ளதுடன் ஜீ தமிழ் சீரியல் முன்னிலைக்கு வந்துள்ளது.

அதன்படி சன் டிவி சீரியலில் முதலாவது இடத்தில் வழமை போன்று சிங்கப் பெண்ணே சீரியலும், இரண்டாவது இடத்தில் கயல் சீரியலும், மூன்றாவது இடத்தை விஜய் டிவி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியலும் பெற்றுள்ளது.


டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களையும் சன் டிவி சீரியல்கள் பிடித்து வரும் நிலையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் அவற்றை முறையடித்து முன்னிலைக்கு வந்துள்ளது. 

ஏற்கனவே சிறகடிக்க ஆசை சீரியல் ஐந்தாம் இடம், நான்காம் என தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கார்த்திகை தீபம் சீரியல் 5 .11 என்ற ரேட்டிங் புள்ளியுடன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement