பிரபு தேவாக்கு ஜீ தமிழ் கொடுத்த சர்ப்பிரைஸ்…அடடே இதை அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டாரே..!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக ஜீ தமிழ் தொலைக்காட்சி விளங்கி வருகின்றது. இதில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் யாவுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சிறந்த விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

அந்த வகையில் இங்கு ஒளிப்பரப்பாகி வரும் ‘சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், தமிழா தமிழா, சூப்பர் குயின்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகம் பிரபல்யம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன.

இந்நிகழ்ச்சிகளில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிகழ்ச்சி 3 சீசன்களைக் கடந்து விட்ட நிலையில் தற்போது நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் 12 சாமானிய போட்டியாளர்கள் 12 திரையுலகப் பிரபலங்களுடன் இணைந்து பிரமாண்டமான முறையில் நடனமாட உள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக சினேகா, பாபா பாஸ்கர், சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கின்றனர். அத்தோடு கிகி மற்றும் மிர்ச்சி விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். ஏற்கெனவே 12 போட்டியாளர்கள் தேர்வானதை தொடர்ந்து இந்த வாரம் குறிப்பாக அவர்களோடு ஜோடி போட போகும் 12 பிரபலங்கள் யார் என்பது தேர்வாக உள்ளது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா பங்கேற்க உள்ளார். இதில் அவர் சற்றுமே எதிர் பார்க்காத வண்ணம் ஒரு சர்ப்பிரைஸ் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. அதாவது இந்த நிகழ்ச்சி குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் பிரபுதேவா படித்த பள்ளியில் இருந்து அவர் அமர்ந்த பெஞ்சை எடுத்து வந்து ஜீ தமிழ் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவருடைய பள்ளிப்பருவ நண்பர்களையும் அழைத்து வந்துள்ளனர். அந்த பெஞ்சில் தன்னுடைய நண்பர்களோடு அமர்ந்து சில கேள்விகளுக்கு பிரபுதேவா பதில் அளித்துள்ளார். மேலும் நடனப் புயலான பிரபுதேவா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சூப்பர் ஹிட் பாடல் ஒன்றுக்கு செம மாஸாக நடனமாடுகிறார்.

இவ்வாறாக ஜீ தமிழ் செய்த சம்பவம் ஆனது பிரபு தேவாவிற்கு மட்டுமன்றி அவர்களது நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்