• Apr 27 2025

ஓம் நமச்சிவாயா.. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ படப்பிடிப்புக்கு நடுவே ஹேமா செய்த வேலையை பாருங்க..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடித்து வரும் ஹேமா தனது சமூக வலைத்தளத்தில் கிரிவலம் செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் நடித்த ஹேமா தற்போது இரண்டாவது சீசனிலும் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் பாண்டியன் குடும்பத்தில் அவர்தான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசிக்கும் கேரக்டராக அமைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்தது.

குறிப்பாக தங்கமயில் குடும்பத்தினர் பல விஷயங்களில் ஏமாற்றுகின்றனர் என்பதை மீனா மட்டுமே கண்டுபிடித்துள்ளார் என்பதும் பாண்டியன் குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் அப்பாவியாக தங்கமயில் குடும்பத்தினர் சொல்லும் பொய்களை நம்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீனா கேரக்டரில் நடித்து வரும் ஹேமா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் சித்திரை முழு நிலவு பௌர்ணமி தினத்தில் கிரிவலம் சென்றதாக வீடியோவை பதிவு செய்துள்ளார். முதல் முறையாக கிரிவலம் செல்வதாக கூறி ’ஓம் நமச்சிவாயா’ என்று பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த வீடியோவுக்கு பலரும்’ ஓம் நமச்சிவாயா’ ’தென்னாட்டுடைய சிவனே போற்றி’ போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா திடீரென ஆன்மீகத்தில் இறங்கி கிரிவலம் செல்லும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement