• Jan 19 2025

ரம்பா புருஷன் கனடா திருடனா? இலங்கை திருடனா? இந்திரனின் முகத்திரையை கிழித்த பயில்வான்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது Northern Uni யினால் யாழில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி. 

இதில் ரம்பா, யோகி பாபு, பாலா,சாண்டி மாஸ்டர், புகழ், தமன்னா,  சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, மகாலட்சுமி, கலா மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்கு பற்றி இருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சி ஆனது கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்றது.

இதில் பங்கு பற்ற இலவச டிக்கெட் என ஆரம்பத்தில்  அறிவிக்கப்பட்ட  போதிலும், பின்னர் 25000, 7000, 3000 ரூபாய் மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என்று  அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் வெறுப்பினையும் ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து அங்கு வந்த ரசிகர்களால் ஏற்பட குழப்பத்தினால் சிறிது நேரம் தடைபட்ட, இந்த நிகழ்ச்சி ஒரு மாதிரியாக நடந்து முடிந்தது.


இந்த நிலையில், ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் ரம்பா கணவர்  தொடர்பில் பேட்டியளித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதன்படி அவர் கூறுகையில், 

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் வெளியான செய்திகளில், தென்னிந்தியாவில் இருந்து வந்த பிரபலங்கள் என்று சொன்னார்களே தவிர தமிழ்நாடு என்ற வார்த்தையை ஒன்றிலும் சொல்லவில்லை. இது எனக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது.

இதுல ஏதோ ஒரு காரணம் இருக்கு. நான் அதை சொல்ல விரும்பல.. தமிழ்நாடு மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்று தான் எனது புரிதல். அவர்கள் தமிழ் நாடு என்று சொல்லவே கூச்சப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தமிழர்கள்.

ஆனால் அதே சமயத்திலே டிசம்பருக்கு முன்னால் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், யாழ்ப்பாணத்தில் இன்னும் பொருளாதார போரை சந்தித்த மக்கள் இன்னும் ரொம்ப கஷ்டங்கள்ல இருக்காங்க.. அவங்களுக்கு ஒரு வைப்ரேஷன் ஆக தான் இந்த நிகழ்ச்சி இலவசமாக நடத்துகிறேன் என்று சொல்லி இருந்தார்.


மேலும், குறித்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள் சரியான ஒளி,ஒலி வசதிகளை ரசிகர்களுக்கு செய்யவில்லை. இதன் காரணமாகவே நிகழ்ச்சியில் குளறுபடி நடைபெற்றது. காசு கொடுத்து வந்தவர்கள் சும்மா இருப்பார்களா? இதனால் கோவப்பட்டு தான் கலவரம் ஆனது.

மேலும், இலங்கையை சேர்ந்த ரம்பாவின் கணவர் இந்திரன். அங்கிருந்த வறியவர்களிடம், வறுமைக்கு உட்பட்டவர்களிடம் காசு அடிச்சிட்டு போய், கனடாவில் பல்கலைக்கழகம் அமைப்பதா? இல்லை இலங்கையில் தனியார் கல்லுரி அமைப்பதா? என சில மீடியாக்கள் கலவரத்தை கிளப்பி விட்டனர். இதுவும் ஒரு காரணம்.

ஆனாலும், 10 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் இதை விட அதிகமான கூட்டம் வந்தது. என்னா அது இலவச நிகழ்ச்சி. மக்களுடனும் அவர் சந்தோசமாக பேசினார். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒழுங்காக நடைபெற்றது.






ஆனால் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலவரம் முழுக்க முழுக்க இந்திரனின் பிழையால் தான் இடம்பெற்றது. அது தோல்வியில் முடிய அவர் தான் காரணம். 


எனவே, இனி வரும் நிகழ்ச்சிகளில் அதன் ஸ்பான்சர் யாரு? இதில் அரசாங்கம் தலையிட்டு இருக்கிறதா? அமைச்சர் வருகிறாரா? என்பதை தெரிந்து கொண்டு போங்கள் என்று கூறியுள்ளார் பயில்வான்.

Advertisement

Advertisement