• Jan 19 2025

’அமரன்’ என்ற டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? ராஜ்குமார் பெரியசாமியின் வேற லெவல் விளக்கம்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’அமரன்’. இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய டீசர் நேற்று வெளியான நிலையில் இந்த டீசர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராகவும் தேசப்பற்று மிக்க ஒருவராகவும் நடித்திருப்பது இந்த டீசரில் இருந்து தெரியவந்தது.

 இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’அமரன்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அமரன் என்றால் அழிக்க முடியாதவர், போர் வீரர், தெய்வீக குணம் கொண்டவர் என்று அர்த்தம் என்றும் இந்த டைட்டிலை தான் நான் எனது திரைக்கதைக்கு முதல் வார்த்தையாக எழுதினேன் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் இதே டைட்டிலில் கடந்த 1992 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியான நிலையில் அந்த படத்தை கே ராஜேஸ்வர் இயக்கி இருந்தார். அந்த படத்தின் இயக்குநர் கே ராஜேஷ்வர் அவர்கள் இந்த டைட்டிலை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ள ராஜ்குமார் பெரியசாமி அந்த படத்தில் ஹீரோவாக நடித்த கார்த்திக் அவர்கள் தான் இந்த டைட்டில் எனக்கு கிடைக்க பரிந்துரை செய்ததாகவும் அவருக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement