• Jan 19 2025

ரஜினி ஹேர் ஸ்டைலுக்கு ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினேன்.. ஒரு லட்சம் வாங்குறதுக்கு அங்க என்ன இருக்கு?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

ரஜினிக்கு ஹேர் ஸ்டைல் அமைக்க ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன் என்று பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் கூறிய நிலையில் ஒரு லட்ச ரூபாய் வாங்கும் அளவுக்கு ரஜினியின் தலையில் என்ன இருக்கிறது என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். 

இந்தியாவின் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைலிஸ்ட் என்று பெயர் பெற்றவர் ஆலிம் ஹக்கீம். இவர் பல பாலிவுட் பிரபலங்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக உள்ளார் என்பதும் குறிப்பாக விராட் கோலிக்கு இவர் தான் கடந்த பல வருடங்களாக ஹேர் ஸ்டைலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 

பல சினிமா பிரபலங்களுக்கு அவர்கள் நடித்த கேரக்டருக்கு இவர்தான் ஹேர் ஸ்டைல் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பாக ரஜினி நடித்த 'ஜெயிலர்’ அனிமல் படத்தில் நடித்த ரன்பீர் கபூருக்கு இவர் தான் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினி உள்பட பல பிரபலங்களுக்கு நான் தான் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக இருக்கிறேன் என்றும் நான் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் என்று பல பிரபலங்கள் என் மீது நம்பிக்கையுடன் இருப்பதால் என்னை அவர்கள் மாற்றியது இல்லை என்றும் அவர்களுடைய நம்பிக்கைக்கு தகுந்தவாறு நான் அர்ப்பணிப்புடன் வேலை செய்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடங்குவதால் விராத் கோலியின் ஹேர் ஸ்டைலை மாற்ற விரும்பினேன் என்றும் அவரது புது விதமான ஹேர் ஸ்டைல் அவருக்கு மிகவும் திருப்தியாக இருந்தது என்றும் அதற்காக அவர் தனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 பல பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலருக்கும் ஆலிம் ஹக்கீம் தான் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக இருக்கிறார் என்பதும் ஒரு முறை ஹேர் ஸ்டைல் செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை அவர் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement