• Jan 19 2025

ஜாக்கி நடிக்கும் படத்தின் புது கெட்டப்.. ஏமார்ந்த ஆடியன்ஸ்க்கு ஜாக்கி ஸ்வீட் விளக்கம்!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

60களில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடங்கிய ஜாக்கிஜான், சிறிய சிறிய வேடங்கள், ஸ்டண்ட் மாஸ்டர் என சினிமாவில் படிப்படியாக வளர்ந்து ஹீரோவாகி ஒரு தனி சாம்ராஜ்யத்தை தனக்கென அமைத்துள்ளார்.

ஆரம்பத்தில் தாய்மொழியான சீன மொழியில் மட்டுமே படங்களை நடித்து வந்த இவர், தன் தனித்துவ பாணியால் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த ரசிகர்களை கவர்ந்து, அதன் பின்பு கண்டம் தாண்டியும் பிரபலமானார்.

போலீஸ் ஸ்டோரி, கராத்தே கிட், ரஷ் ஹவர், ஷாங்காய் நைட்ஸ் என பல திரைப்படங்கள் மட்டுமின்றி, ஜாக்கிசானின் சாகசங்கள் கார்ட்டூன் என இன்றும் தொடர்ந்து ஆடியன்ஸ்சால் ரசிக்கப்பட்டு வருகிறார் ஜாக்கி.

அண்மையில் ஜாக்கிஜான் நரைமுடியுடன் மிகவும் வயதான தோற்றத்தில் பொது வெளியில் இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இது 90ஸ் கிட்ஸை மிகவும்  கவலையில் ஆற்றி இருந்தது.


இந்த நிலையில், குறித்த புகைப்படத்தை பார்த்து யாரும் வருந்த வேண்டாம். நான் நடித்து வரும் புதிய படத்திற்கான தோற்றம்தான் அது. புதிய விஷயங்களை முயற்சிப்பது எப்போதும் எனக்கு பிடிக்கும் என தனது 70 ஆவது பிறந்தநாள் ஒட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் ஜாக்கிஜான்.

அதன்படி அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் எனது சமீபத்திய புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது. அதில் அனைவரும் எனது உடல்நிலை குறித்து கவலைப்பட்டார்கள். நான் இந்த வாய்ப்பை தற்போது எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். 


யாரும் கவலைப்பட வேண்டாம். நான் சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதற்கான தோற்றம்தான் அது. அந்த கேரக்டருக்கு வெள்ளை முடி, வெள்ளைத்தாடி, வயதான தோற்றம் வேண்டும். பல ஆண்டுகளாக நான் சவாலான ஸ்டேண்ட் செய்வது ஆகட்டும் அல்லது ஒரு திருப்புமுனை பாத்திரத்தில் நடிப்பதாக இருக்கட்டும், ஒரு திரைப்படத்திற்கு புதிய விஷயங்களை முயற்சிப்பதற்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன்.

62 ஆண்டுகளாக இந்த பொழுதுபோக்கு பிசினஸில் இருக்கின்றேன். ஒவ்வொரு தருணத்தையும் நான் மதிக்கின்றேன். ஏனென்றால் இன்று கூட படப்பிடிப்பில் இருந்தபடியே தான் இருக்கிறேன்.

அண்மையில் எனது பணியாளர்கள் எனது மறக்க முடியாத பல புகைப்படங்களை கண்டறிந்தார்கள். இந்த பதிவில் அவற்றில் தேர்ந்தெடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளேன். இதை பார்க்கும் போது பல இனிய நினைவுகள் வருகின்றன. நான் உங்கள் அனைவரையும் விரும்புகின்றேன்.  எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாக இருங்கள் என பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement