• Jan 19 2025

வனிதா மகனுக்காக கதை கேட்ட ரஜினி.. தைரியமாக சொன்ன விஷயம்..??

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் தான் முடிந்தன.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேமஸ் ஆனார். பிக் பாஸ் டைட்டிலை இவர் வெல்லா விட்டாலும் பட வாய்ப்புகள் குவிந்தன.

வனிதா விஜயகுமார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டாலும்  அவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்போது வரையில் 17 படங்களில் கமிட் ஆகி உள்ளதாக கூறியுள்ளார்.


இந்த நிலையில், வனிதாவின் மகனான ஸ்ரீஹரி பிரபு சாலமன் இயக்கும் மாம்போ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகின்றார்.

இதன் போது பேசிய விஜயகுமார் கூறுகையில், ஒரு முறை ஸ்ரீஹரியை அழைத்துக் கொண்டு ரஜினி சந்திக்க சென்றேன். அப்போது அவரிடம் இவன் நடிக்க  விருப்பம் என்று சொன்னார். அதற்கு அவர் பாராட்டி விட்டு யார் இயக்குனர் என்று கேட்டார்.

பிரபு சாலமனிடம் ஆகாஷ் ஏற்கனவே பேசிவிட்டதாக சொன்னேன். அதற்குப் பிறகு என்னிடம் கதை என்னவென்று கேட்டார் ரஜினி. ஆனால் அதை பற்றி எனக்குத் தெரியாது பிறகு இந்த கதையை ரஜினியிடம் சொல்ல சொன்னேன். இந்த கதையை கேட்டுவிட்டு கதை வேறு விதமாக உள்ளது. சிங்கம் தான் ஹீரோ கேட்கவே மாசாக இருக்கிறது. தைரியமா பண்ணுங்க என்று கூறியதாக விஜயகுமார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement