• Jan 19 2025

எல்லா தியேட்டரிலும் தூக்கிய பிறகு ‘இந்தியன் 2’ படம் ஓட ஐடியா கொடுத்த நடிகை அம்பிகா..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் இன்றுடன் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் தூக்கப்பட இருப்பதாகவும் நாளை முதல் தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் திரையிட போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நடிகை அம்பிகா ’இந்தியன் 2’ படம் பார்த்தேன் என்று கூறி இந்த படம் ஓடுவதற்கு ஒரு முக்கிய ஐடியாவை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனம் குவிந்ததால் அடுத்த நாளே இந்த படத்தின் வசூலில் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் படம் நீளமாக இருப்பதாக பலர் விமர்சனம் செய்த நிலையில் படக்குழுவினர் சுமார் 12 நிமிடம் படத்தின் நீளத்தை குறைத்த போதிலும் இந்த படம் தேறவில்லை என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்களிலும் தூக்கிவிட்டு ஓடிடியில் ‘இந்தியன் 2’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் உடன்’சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை அம்பிகா ’இந்தியன் 2’ படத்தை பார்த்தேன் என்று கூறியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

 ‘இந்தியன் 2’ படம் பார்த்தேன், எனக்கு பிடித்திருக்கிறது, 15 நிமிடம் நீளமாக இருந்தது, இன்னும் 15 நிமிடங்கள் குறைத்து இருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது. மற்றபடி கடின உழைப்பு, நடிப்பு, மற்றும் ஏராளமான செலவு செய்திருக்கிறார்கள் என்பதை இந்த படத்தை பார்த்த பிறகு தெரிகிறது’ என்று கூறினார். இருப்பினும் ‘இந்தியன் 2’ கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் தூக்கிய பிறகு இனிமேல் அம்பிகா கொடுத்த ஐடியா செயல்படுத்தப்படுமா? என்பது கேள்விக்குறியே.


Advertisement

Advertisement