• Jan 20 2025

இன்னைக்கு செம பிடி தான்.. விருது விழாவில் ராஜபோக விருந்து..!! மெனுவை பார்க்கவே தலை சுத்துதே.!!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் விஜய். படங்களிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பொது மக்களுக்கு ஆற்றும் சேவையிலும் சரி விஜய்க்கு தனி மரியாதை காணப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தது பலரிடம் வரவேற்பை பெற்றது. அதேபோல பல விமர்சனத்தையும் சந்தித்தது. அதற்கு காரணம் அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டு இரண்டு வருடங்களுக்கு விடுமுறை கொடுத்திருப்பது விஜய் மட்டும் தான். ஏனென்றால் அவரது இலக்கு 2026 என்று தான் ஆரம்பத்திலேயே கூறியுள்ளார்.

ஆனாலும் தனது கட்சியை பலப்படுத்தும் சேவைகளில் விஜய் மும்முரமாக செயற்படுகின்றார். அதில் ஒன்றாக தான் இந்த கல்வி விருது விழா காணப்படுகின்றது.


தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களிலும் இருந்து சுமார் 800 மாணவர்களுக்கு இன்றைய தினம் கல்வி விருது விழா நடாத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு சால்வை போர்த்தி, ஊக்கத்தொகை வழங்கியதோடு வைர மோதிரத்தையும் வழங்கி இருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தடபுடலாக ராஜ விருந்தும் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சோறு, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், மோர், வத்த குழம்பு, வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், தயிர் பச்சடி ,இஞ்சி துவையல், அவரை மணிலா பொரியல் உருளைக்கிழங்கு கார கறி, வெங்காயம் மணிலா உள்ளிட்ட பல சாப்பாடுகள் செய்யப்பட்டு பரிமாறப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement