• Apr 15 2026

வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை விஜய் முன் தனது பாணியில் மாற்றி பாடிய ஆசிரியர்! அவர் பாடிய வரிகள் இதோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

இன்றய தினம் பெரிதும் வைரலாக காணப்படுவது தளபதி விஜய் மாணவர்களுக்காக நடாத்தும் பாராட்டு விழாவாகும். குறித்த விழாவில் அனைத்து மாணவர்களுக்கும் விருது வழங்கப்படுவதுடன் இறுதியில் அவர்களுக்கு உணவும் வழங்கப்படுகின்றது. 


இந்த நிலையிலேயே குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவிகள் சிலர் தங்கள் கருத்துக்களையும் நன்றிகளையும் மேடையில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிலேயே குறித்த மேடையில் விஜயை வாழ்த்தி பேசிய ஆசிரியர் ஒருவர் இறுதியாக  ஒரு பாடலும் பாடியிருந்தார்.


“கட்சியில சேரணும்னு வீட்டுல சொன்னேங்கண்ணா.. விடவே இல்லைங்கண்ணா.. தவெக தலைவர் விஜய் அண்ணா கட்சியின்னு சொன்னேங்கண்ணா, Okன்னு சொன்னாங்கண்ணா.. ஊதுறோம் ஊதுறோம் ஊதுறோம்ணா, எல்லா கட்சியையும் ஊதுறோம்ணா.. ஆக்குறோம் ஆக்குறோம் ஆக்குறோம்ணா, உங்கள முதலமைச்சர் ஆக்குறோம்ணா" என விஜய்யை அருகில் நிற்க வைத்து 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' பாடலின் லிரிக்சை மாற்றி பாடியுள்ளார்.

Advertisement

Advertisement