• Jan 19 2025

இப்படி வருகிற வருமானத்துல உங்கள் புள்ளைங்களை வளர்க்கணுமா? வெட்கமா இல்லையா? ராதிகா..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை ராதிகா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் அவதூறாக பேசியவர்களை கடுமையாக விமர்சனம் செய்து  பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரை உலகினர் குறித்து வதந்திகளை பரப்பி அது குறித்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து அதில் கிடைக்கும் வியூஸ் மற்றும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஏதாவது ஒரு சின்ன நிகழ்வு நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்கி, பரபரப்பை ஏற்படுத்தி வியூஸ் மற்றும் வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும் இந்த கும்பலுக்கு நடிகை ராதிகா சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி  ஒன்றில் பேசிய போது சாட்டை அடி கொடுத்துள்ளார்.

நாங்கள் நடிக்கும் போது உள்ள காலகட்டம் வேறு, இப்போது உள்ள காலகட்டம் வேறு, இலவச இன்டர்நெட் இருப்பதால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?   யாரை பற்றியும் அவதூறாக கூறலாமா? வருமானம் வருகிறது என்பதற்காக எந்த லெவலுக்கும் இறங்க தயாராக உள்ள குரூப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்த குரூப்புகள் எங்களைப் பற்றி, எங்கள் குடும்பத்தை பற்றி பேசி, அடுத்தவங்களை பற்றி அவதூறாக பேசி, அதில் வரும் பணத்தில் அவர்கள் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்றால் உண்மையில் அது ஒரு நல்ல விஷயம் அல்ல.

உங்களுடைய பதிவுகளை எல்லாம் நாங்கள் சிரித்துக் கொண்டே கடந்து விடுவோம் என்று மட்டும் நினைக்காதீர்கள், உங்களால் என்னுடைய வாழ்க்கையை ஒருபோதும் மாற்ற முடியாது, என்னுடைய வாழ்க்கைப் பயணத்தையோ, வெற்றியையோ உங்களால் ஒரு செகண்ட் கூட மாற்ற முடியாது, நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி வந்தார்கள், நாங்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறோம்.

எங்களுடைய பொறுமையை, மனித தன்மையை நீங்கள் முட்டாள்தனம் என்று நினைக்க கூடாது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேச்சை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement