• Jul 04 2025

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பைரவா ஆன்த்தம் பாடலின் ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரை உலகின் பிரபல நட்சத்திரங்களான அமிதாபச்சன்- பிரபாஸ்- கமலஹாசன்- தீபிகா படுகோன் கூட்டணியில் உருவாகும் படம் தான் கல்கி 28 98 ஏடி. இந்த படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாபச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன், திஷா படாணி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீடு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. 


இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பைரவா ஆன்த்தம்  பாடலின் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகின்றது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த வருடத்தின் மிகப்பெரிய பாடல் என இந்த பாட்டை பட குழு அறிவித்த நிலையில், இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மேலும் அதிகரித்து உள்ளது. தற்போது இந்த பாடலின் ப்ரோமோவை வெளியிட்டு மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.


Advertisement

Advertisement