• Jan 18 2025

இன்னும் எத்தன மொட்ட கடதாசி போடணும்.? இன்னைக்கு யார் டௌசெர் கிழியப்போகுதோ.??

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தை கடந்துள்ளது. 34 ஆவது நாளான இன்றைய தினம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

d_i_a

இதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி வெளியே சென்றார்கள். அதன் பின்பு வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.


இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவின் படி விஜய் சேதுபதி கூறுகையில், இந்த வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு பிறகு போட்டில சுவாரஸ்யம் மாறி இருக்கா? பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்கிற போட்டியாளர்களின் கதையை கேட்ட பிறகு அவங்களை பாக்கிற பார்வை மாறி இருக்கு.

ஆனா மாறாம இருக்கிறது உண்மையா விளையாட சொன்னது தான். அத ஏதோ பூசி மெழுகி விளையாடிட்டு இருக்காங்க.. அதுக்கு மொட்ட கடதாசி தேவைப்படுது. இன்னும் எத்தனை மொட்டை கடதாசி போடணும் என்று தெரியல என விஜய் சேதுபதி தெரிவித்து உள்ளார். 

Advertisement

Advertisement