அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனை, விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் இந்த ஆண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர்.
முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையில் மோதல்கள் தொடங்கி உள்ளன. அதிலும் திவாகர் மற்றும் பிற போட்டியாளர்கள் இடையில் வாக்குவாதம் பெரிதாக உள்ளது.
இந்த நிலையில், பிரவீன் காந்தி பெண்கள் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
அதாவது, நள்ளிரவில் விக்ரம் , துஷார் மற்றும் நந்தினியுடன் பேசிய பிரவீன் காந்தி, தன்னைவிட அழகான இன்னொரு பெண் வந்துவிட்டால் அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த இடத்தில் அவர்களை தூக்கி சாப்பிட என்ன செய்யலாம் என்று தான் யோசிப்பார்கள். அது பெண்களின் படைப்பு.
கடவுள் படைப்பிலேயே பெண்களிடம் இரண்டு விஷயங்களை கொடுத்து விட்டார். ஒன்று பொறாமை, இன்னொன்று பேராசை. இந்த இரண்டை பெண்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது என பிரவீன் காந்தி கூறியுள்ளார்.
இதை கேட்ட நந்தினி, எல்லா மனிதர்களுக்கும் பொறாமை உணர்வு இருக்கத்தான் செய்கின்றது. பெண்களை மட்டும் ஒரு படையாய் கொண்டு பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.
Listen News!