• Jan 19 2025

மோடியை மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிரகாஷ் ராஜ்..! வேகமாக பரவும் ட்விட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

நாடளாவிய ரீதியில் 18 வது மக்களவைப் பொது தேர்தலுக்கான முடிவுகள் காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் பல தொகுதியில் பாஜக முன்னிலையில் இருந்தாலும் ஒவ்வொரு எண்ணிக்கை சுற்றுகளின் முடிவின் போதும் பாஜக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. தனி பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை பெறுவதற்கு பாஜக தொடர்ந்து போராடி வருகின்றது.

இந்த நிலையில், சமூக ஆர்வலரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தல பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியை மறைமுகமாக சாடியுள்ளார்.


இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள பதிவில், இப்போது தனித்து நடக்க முடியாது. அவருக்கு யாராவது உதவி செய்தால் மட்டுமே நடக்க முடியும். I.N.D.I.A  கூட்டணிக்கும் அவர்களுக்கு வாக்களித்த பொறுப்பான நாட்டு மக்களுக்கும் நன்றி. அவரது ஈகோவை (பிரதமர் மோடியின்)  உடைத்து அவரது இடத்தை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக நன்றி. இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் போராடுவோம். இந்தியாவுக்காக உடன் இருப்போம் எனப் பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். தற்போது இவரது இந்த பதிவு வேகமாக வைரலாகி  வருகின்றது.


Advertisement

Advertisement