• Oct 22 2025

ஒரு அப்பாயின்மென்ட்ல பிரதீப் வாழ்க்கையே மாறிடுச்சு.! யாருக்கு தூண்டில் போட்டர்னு தெரியுமா?

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  புதிய பாக்ஸ் ஆபீஸ் ட்ராகனாக  உருவெடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து வருகின்றன.  சூப்பர் ஸ்டாரின் ரசிகர் ஆன பிரதீப்  தானும் ஒரு சூப்பர் ஸ்டார் மெட்டீரியல் என்பதை நிரூபித்து வருகின்றார். 

கோமாளி, லவ் டுடே, டிராகன் படங்களை தொடர்ந்து பிரதீப் நடித்த டியூட் திரைப்படமும் 5 நாட்களில் 100 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  இதனால் தற்போது 2கே கிட்ஸ்க்கு பிடித்த ஸ்டாராக பிரதீப் மாறியுள்ளார்.

இந்த நிலையில், ஐசரி கணேஷ் அளித்த பேட்டியில் பிரதீப்பிற்கு வாய்ப்பு கொடுத்தது பற்றி மனம் திறந்து உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,  எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் பிரதீப் படித்துக் கொண்டிருந்தபோது அந்தக் கல்லூரியில் ஜீனியராக எனது மகளும் படித்தார்.


இதன்போது  தனது டைரக்சன் ஸ்கில்லை பிரதீப் வெளிப்படுத்த, எனது மகள் பிரதீப்பை சந்திக்கும் வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு கேட்டார்.

அதன்படி பிரதீப்பும் வந்து சந்தித்தார். இதன் போது  பிரதீப் கதை சொல்லும்போது யாரிடமும் வொர்க் பண்ண இல்லை.. எந்த அனுபவமும் இல்லை. ஆனால் கதையைக் கேட்க புதுசாக இருந்தது. மேலும் அதில் யாரை ஹீரோவாக நடித்த வைக்கலாமென்று கேட்க, உடனே ஜெயம் ரவி சாரை பிரதீப் சொன்னார். 

அப்போ என்னிடம் ரவியோட டேட் இருந்தது. உடனே போன் போட்டு ரவிக்கு சொன்னேன். பிரதீப்பின் நல்ல நேரம் ஜெயம் ரவி அன்று மாலை free தான் என்றார். பிரதீப்பும் அவரை மாலை சந்தித்து கதையை சொல்ல,  கதையை ஓகே செய்த ரவி ஷூட் எப்போ என்று கேட்டார்.

இப்படித்தான் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஆரம்பித்தார்.  முதல் நாளிலிருந்து கடுமையான உழைப்பை போட்டதால் தான் என்று அவருடைய வளர்ச்சி இவ்வாறு உள்ளது என்று ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். 




Advertisement

Advertisement