• Jan 19 2025

நான் உயிரோடு தான் இருக்கிறேன்.. இறந்ததாக கூறப்பட்ட பூனம் பாண்டே இன்று வெளியிட்ட வீடியோ

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!


நடிகை பூனம் பாண்டே நேற்று கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானார் என்று அவருடைய மேலாளர் அறிவித்த நிலையில் இன்று திடீரென பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பூனம் பாண்டே அந்த வீடியோவில் கூறிய போது ’நான் உங்கள் அனைவரிடமும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், நான் உயிருடன் தான் இருக்கிறேன், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்னை கொல்லவில்லை, ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரைப் பறித்துள்ள இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நேற்று எனது மரணச்செய்தி வெளியிடப்பட்டது.

மற்ற புற்றுநோய் போல் அல்லாமல் கர்ப்பப்பை புற்றுநோய் இல்லை, இது முற்றிலும் தடுக்க கூடியது, தடுப்பூசி மற்றும் ஆரம்ப கால கண்டறிதல் சோதனைகள் மூலம் இந்த நோயை எளிதில் குணப்படுத்த முடியும். ஆனால் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பலர் தங்கள் உயிரை இழந்து உள்ளனர். இது குறித்த விழிப்புணர்வை நாம் அனைவரும் ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு பெண்ணும் இந்த நோய் குறித்து அறிந்து கொண்டு அந்த நோயிலிருந்து வெளியே வருவதற்கான முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நோயின் அழிவுகரமான தாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நேற்று இந்த செய்தி பரப்பப்பட்டது என்று பூனம் பாண்டே கூறியுள்ளார்

நேற்று பூனம் பாண்டேவின் மேலாளர் புற்றுநோய் காரணமாக நாம் பூனம் பாண்டேவை இழந்துவிட்டோம் என்று கூறிய நிலையில் இன்று பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இறந்தது போன்ற செய்தி வெளியிடுவது முற்றிலும் தவறானது என்று ரசிகர்கள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement