சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் இப்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு சம்பவமாக மாறியுள்ளது சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் ஜாய் கிரிசில்டா இடையே ஏற்பட்ட உரையாடல், புகார்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த காவல் நிலைய நடவடிக்கைகள்.
ஜாய் கிரிசில்டா கூறியபடி, “திருமணம் செய்து கொள்வதாக கூறி அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளார்” என்பதையடுத்தே, அவர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது தனது உரிமைகளை கேட்டு புகார் செய்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, நீலாங்கரை போலீஸார் மாதம்பட்டி ரங்கராஜுக்கு செப்டம்பர் 26ம் தேதி விசாரணைக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாய் கிரிசில்டா, ஒரு ஆடை வடிவமைப்பாளர். அவர் வெளியிட்ட புகாரின் முக்கிய அம்சங்களாக, "மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்வதாக உறுதி செய்தார். ஆனால், அவர் தற்பொழுது என்னை பிரிந்து முதலாவது மனைவியிடமே சென்று விட்டார். என்னை ஏமாற்றி விட்டார்." என புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தற்போது மீடியாக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. ஜாய் கிரிசில்டா அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு, சென்னை நீலாங்கரை போலீசார், மாதம்பட்டி ரங்கராஜுக்கு செப்டம்பர் 26ம் தேதி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
Listen News!