• Oct 26 2025

மாதம்பட்டி பாகசாலா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை... ஜாய் கிரிசில்டா பகீர்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம். இந்த விவகாரத்தில் 'மாதம்பட்டி பாகசாலா' என்ற பிரபலமான கேட்டரிங் நிறுவனத்தின் பெயர் அதிகம் பேசப்பட தொடங்கியுள்ளது.


இந்நிலையில், “மாதம்பட்டி பாகசாலா குறித்து எந்த கருத்தையும் நான் வெளியிடவில்லை” என ஜாய் கிரிசில்டா தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள புதிய விளக்கம் தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜாய் கிரிசில்டா தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து வருகின்றார். இதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் தன்னுடைய உறவுகள் குறித்து சில உணர்வுபூர்வமான பதிவுகளையும் வெளியிட்டுள்ளார்.


இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக பரவ, சிலர் ஆதரித்து பேசினர்; சிலர் விமர்சித்தனர். இந்நிலையில், "என் சமூகவலைத்தள பதிவுகளால் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை. எனக்கும், பிறக்க இருக்கும் குழந்தைக்கும் நீதி கேட்டு தான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன். மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.." என ஜாய் கிரிசில்டா தற்பொழுது தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement