இயக்குநர் பிரேம் குமார் தமிழ் சினிமாவிற்கு நுட்பமான காதல் உணர்வுகளைக் கொண்டு வந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருடைய படமான '96' திரைப்படம், 2018ஆம் ஆண்டு வெளியானபோது, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையேயும் பேராதரவை பெற்றது. அந்த வெற்றியின் பின்புலத்தில் அவர் இயக்கிய 'மெய்யழகன்' திரைப்படம், சமீபத்தில் ஓடிடி (OTT) தளத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில், இயக்குநர் பிரேம் குமார், மெய்யழகன் திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பற்றி மிகவும் திறந்த மனதுடன் பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
பிரேம் குமார் தனது பேட்டியில், “மெய்யழகன் படத்தை நான் மலையாளத்தில் எடுத்திருந்தால், தமிழ் ரசிகர்களே அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருப்பார்கள் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். தமிழில் எடுத்தது தான் என் தவறு என சொல்லியதைக் கேட்கும் போது, மனதில் ஏமாற்றம் ஏற்பட்டது.
எனினும் இப்படத்திற்கு எனக்கு OTT-யில் சிறந்த பாராட்டு கிடைத்தது. நான் ரிவ்யூவர்களை அச்சுறுத்தலாகவே பார்க்கின்றேன். அவர்களுக்கு மன ரீதியான பிரச்சனை இருக்கிறது. இதைச் சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை." என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!