• Nov 26 2025

பெரம்பலூரில் த.வெ.க தலைவர் விஜய் வருகை ரத்து!மக்கள் அதிருப்தி, போஸ்டர்களால் பரபரப்பு...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தலைமையிலான தமிழக விருதுநகர் கழகத்தின் (த.வெ.க) பிரச்சார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பெரம்பலூரில் நடைபெற இருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நள்ளிரவில் எதிர்பாராத வகையில் ரத்து செய்யப்பட்டதைக் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.


தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (14-09-2025) தொடங்கிய விஜய், திருச்சி, அரியலூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் ஆகிய நான்கு பகுதிகளில் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10:30 மணிக்கு திருச்சியில் பிரச்சாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மதியம் 3 மணிக்கே மரக்கடை பகுதியில் விஜய் வருகை தந்தார். அதன் பிறகு, இரவு 9 மணிக்கு அரியலூரில் பிரச்சாரம் செய்தார்.

அதன் பின்னர், இரவு 9:30 மணிக்கு குன்னத்தில் பிரச்சார பேருந்தின் மீது ஏறி ரசிகர்களுக்கு கை அசைத்த விஜய், உரையாற்றாமல் பேருந்துக்குள் சென்றார். அவர் பேசுவார் என எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் கலைந்தனர். பெரம்பலூரில் நடைபெறவிருந்த இறுதி நிகழ்ச்சி நள்ளிரவில் ரத்து செய்யப்பட்டது.


இதனை எதிர்த்து, பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் “அரசியல் வார இறுதி ட்ரிப் இல்லை, இது 24 மணிநேர வேலை” என கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தற்போது சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement