பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி மயில் அம்மா கிட்ட மயில் சரவணனை விட ரெண்டு வயசு பெரியவள் என்கிறார். அதனை அடுத்து குழலியும் வாய்கிழிய பேசுவீங்க இப்ப ஏன் பேசாம இருக்கிறீங்க என்று கேட்கிறார். பின் மயிலோட அம்மா கோமதி கிட்ட என்ர மகள் நிஜமாவே MA படிச்சவள் என்கிறார். மேலும் நீங்க எல்லாம் தப்பா புரிஞ்சிருக்கீங்க என்று சொல்லுறார்.

அதைக் கேட்ட கோமதி உங்க பொண்ணே ஒத்துக்கிட்டா நீங்க நடிக்காதீங்க என்கிறார். பின் செந்தில் எங்க அப்பா உங்கள எவ்வளவு நம்பினாரு ஏன் இப்புடி செய்தனீங்க என்று கேட்கிறார். அதனை அடுத்து மயிலோட அப்பா நாங்க எல்லாம் நல்ல குடும்பத்தில இருந்து வந்தவங்க எங்க மேல இப்புடி அபாண்டமா பொய் சொல்லாதீங்க என்கிறார்.
அதைக் கேட்ட சரவணன் நீங்க நல்லவங்களா என்று கோபமாக கேட்கிறார். அதைத் தொடர்ந்து சரவணன் மயில் அப்பா பொய் மட்டும் சொல்லுறேல திருட்டு வேலையும் பார்த்தவர் என்கிறார். மேலும் தனக்கே தெரியாம இந்தக் குடும்பத்துக்கு சப்போர்ட் பண்ணியிருக்கேன் என்கிறார் சரவணன். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.

பின் மயிலோட அப்பா உங்களுக்கு தெரிஞ்ச எல்லாமே உண்மை தான் என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் நம்பிக்கையில மண் அள்ளிப் போட்டுட்டிங்கள் என்று கோபப்படுறார். மேலும், மயில் சந்தோசமா வாழனும் என்ற நினைப்பே இல்லையா என்று கேட்கிறார் பாண்டியன். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!