இந்திய திரைப்பட வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த நடிகராகவும், மக்கள் மனங்களை அரை நூற்றாண்டாக கவர்ந்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் இன்று உலகெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பல்வேறு துறைகளிலிருந்து திரளாக வந்துகொண்டிருக்கின்றன. அதில் கவனத்தை ஈர்த்த ஒன்று, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ள உணர்ச்சிபூர்வமான வாழ்த்து.
ரஜினிகாந்திற்காக அவர் எழுதிய வாழ்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் கூறியதாவது, "ஆறிலிருந்து அறுபது வரைக்கும் அரை நூற்றாண்டாக கவர்ந்திழுக்கும் என் நண்பர் ரஜினிகாந்திற்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்." என்றார்.

இந்த உணர்வுபூர்வமான வார்த்தைகள், ரஜினிகாந்தின் திரைபயணத்தையும் மக்களிடையே அவர் பெற்றிருக்கும் அன்பையும் ஒரே வரியில் சித்தரித்துவிட்டன.
1950 டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த ரஜினிகாந்தின் வாழ்க்கை, ஒரு சாதாரண மனிதர் எப்படித் தன் கனவைத் துணிச்சலாகத் தொடர்ந்து, உலகளவிலான சின்னமாக உயர முடியும் என்பதை நிரூபித்த நம்பிக்கையின் பாதை.
பஸ் கண்டக்டராக பணியாற்றிய இளைஞர், கடின உழைப்பின் மூலம் நாட்டின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். சுமார் 50 ஆண்டுகளாக அவரது படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!