சவுதி அரேபியாவின் கலாசார நகரமான ஜெட்டாவில், இந்த மாதம் 13-ஆம் தேதி வரை நடைபெறும் செங்கடல் திரைப்பட விழா ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இந்த விழா, ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களைப் பெருமைப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும், சர்வதேச திரையரங்கில் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் தளமாகவும் அமைந்துள்ளது.

இந்த விழாவில், இந்தியா மற்றும் பாலிவுட் திரைப்படங்களுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு ‘கோல்டன் குளோப்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகளவில் ரசிகர்களின் அன்பையும், சினிமா விமர்சகர்களின் பாராட்டையும் பெறும் ஆலியா பட்டின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு, இந்த விருதின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டது. விருதை பெற்றபோது ஆலியா பட் தனது ஆரம்பகால உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.
Listen News!