• Jan 19 2025

புடவை பில்லை பார்த்தவுடன் அடிவயிறு கலங்கிய பாண்டியன்.. கடையிலேயே சண்டை வந்துருமோ?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் பாண்டியன் மற்றும் தங்கமயில் குடும்பத்தினர் புடவை எடுக்கும் கடைக்கு செல்கின்றனர். அங்கு நடக்கும் கலகலப்பு தான் இன்றைய எபிசோடு என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் வீட்டிலிருந்து கிளம்பும்போதே முகூர்த்த புடவை 25000, மற்ற பெண்களுக்கு தலா 10,000, வேட்டி சட்டை 2000 என்று பட்ஜெட் போட்டுவிட்டு மொத்தமாக ஒரு லட்ச ரூபாயில் முடிந்து விடலாம் என்று கணக்கு போட்டு செல்கிறார். ஆனால் முகூர்த்த புடவை மட்டுமே ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கு எடுத்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.

நான் பத்தாயிரம் என்று தான் நினைத்தேன், இது ஒரு லட்சத்து பத்தாயிரம் என்று அவர் புலம்பி கொண்டிருக்கும் நிலையில் தான் மீனா ’நான் அப்போதே சொன்னேன், இங்கே இருக்கும் சேலைகள் எல்லாம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானது’ என்று கூற ’நீ முன்னாடியே சொல்லி இருக்க வேண்டாமா’ என்று அவர் கோபித்துக் கொள்கிறார்.

இந்த நிலையில் இனிமேல் இந்த புடவை வேண்டாம் என்று சொன்னால் சம்மந்தி வீட்டுக்காரர்கள் தப்பாக நினைப்பார்கள், அதனால் இருக்கட்டும், இனிமேல் எடுக்கும் புடவைகளை பார்த்து குறைவான விலையில் எடுத்துக் கொள்ளலாம்’ என்று கோமதி சொல்ல அதன் பிறகு ரிசப்ஷனுக்கு புடவை எடுக்கும் பகுதிக்கு செல்கின்றனர்.

அங்கு தங்கமயில் அதிக விலையுடைய புடவைகளை தேர்ந்தெடுக்க அதெல்லாம் நன்றாக இல்லை என்று கூறி 20000 ரூபாய் புடவையை மீனா எடுத்து கொடுத்து இது உங்கள் கலருக்கு நன்றாக இருக்கும் என்று கூறுகிறார். ஆனால் தங்கமயிலுக்கு அந்த புடவை பிடிக்கவில்லை, அவருடைய அம்மா பாக்கியத்திற்கும் பிடிக்கவில்லை, மேலும் சரவணனுக்கும் பிடிக்கவில்லை என்பது போல் தெரிகிறது.

இதனால் புடவை எடுக்கும் விஷயத்தில் பாண்டியன் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும், தங்கமயில் குடும்பத்திற்கும் சண்டையே வந்தால் கூட ஆச்சரியம் இல்லை என்ற நிலையில் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.

Advertisement

Advertisement