• Jun 23 2024

சென்னையில் செந்தில் - மீனா.. படம் பார்த்துவிட்டு வந்த சரவணனுக்கு திட்டு.. கோமதிக்கு திடீர் சோகம்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் மற்றும் மீனா சென்னைக்கு கிளம்புகின்றனர். அவர்களை குடும்பத்தினர் அனைவரும் வழி அனுப்பும் நிலையில் ’சென்னைக்கு சென்று தாராளமாக செலவழிக்க வேண்டும் என்று பாண்டியன் 500 ரூபாய் நோட்டுகளை எண்ணுகிறார், ஆனால் கடைசியில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து, மீனா கேட்பதையெல்லாம் வாங்கி கொடு, தாராளமாக செலவு செய்’ என்று சொல்லும் போது செந்தில் அதிருப்தி அடைகிறார். மீனா உள்ளுக்குள் சிரிக்கிறார்.

அப்போது அரசி, ‘ஆயிரம் ரூபாய் போதாது என்று சொல்ல, அதான் எல்லாமே ஃப்ரீயாக  மீனா ஆபீஸில் கொடுக்கிறார்களே, இது செலவுக்கு மட்டும் தானே, போதும்’ என்று பாண்டியன் கூறுகிறார். அதன் பிறகு ஒரு வழியாக எல்லோரிடம் விடை பெற்றுக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் செல்லும் நிலையில் கதிர் அவர்களை பஸ் ஏற்றி அனுப்பி விடுகிறார்.

இந்நிலையில் சரவணன், தங்கமயில் ஆகிய இருவரும் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வர அவர்களிடம், ‘படம் எப்படி இருந்தது, என்ன ஏது என்று பாண்டியன் விசாரிக்கிறார். சரவணன் தயங்கிக் கொண்டே ’படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தூங்கிவிட்டேன்’ என்று சொல்ல அதற்கு பாண்டியன் திட்டுகிறார். 1200 ரூபாய் கொடுத்து படம் பார்க்க சொன்னால் தூங்கிட்டியா’ என்று கூறியதோடு தங்கமயிலிடம் ’படத்தின் கதை சொல்லு’ என்கிறார்.



முதலில் அதிர்ச்சி அடையும் தங்கமயில் அதன் பிறகு படத்தின் கதையை முழுவதுமாக சொல்ல ’காலம் காலமாக இதே கதையை தான் எடுக்கிறார்கள், இதுக்கா 1200 ரூபாய்? என்று புலம்புகிறார். அதனை அடுத்து வாங்கிய தின்பண்டங்களையாவது  சாப்பிட்டியா? என பாண்டியன் கேட்க அதற்கு சரவணன் ’பாதி தான் சாப்பிட்டேன்’ என்று கூற அதற்கும் பாண்டியன் திட்டுகிறார். ஆனால் தங்கமயில் ’நான் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டேன், கூல்டிரிங்க்ஸ் கூட குடித்துவிட்டேன்’ என்று கூறி பாண்டியனிடம் பாராட்டு பெறுகிறார்.

இந்த நிலையில் கதிர் தன்னிடம் பேசவில்லை என்று கோமதி சோகமாக ராஜியிடம் கூற, ’இதற்கெல்லாம் போய் வருத்தப்படலாமா, போய் நிம்மதியாக தூங்குங்கள்’ என்று ராஜி அவருக்கு ஆறுதல் சொல்வதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement