• Jul 24 2024

விஜய்சேதுபதிக்கு வாழ்த்து.. விஜய்க்கு ஸ்பெஷல் மாதம்.. அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் வைரல்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான ’மகாராஜா’ நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ’விஜய்க்கும் இது ஸ்பெஷல் மாதம்’ என்று கூறி இருப்பதால் இந்த மாதம் ஒரு சூப்பர் அப்டேட் வர உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக கிராபிக்ஸ், டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் ’தளபதி விஜய்க்கு இம்மாதம் ஸ்பெஷல் என்பதால் சூப்பர் ஸ்பெஷல் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்’ என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தளபதி விஜய்யின் பிறந்த நாள் மாதம் என்பதால் இந்த மாதத்தை அவர் சூப்பர் ஸ்பெஷல் மாதம் என்று குறிப்பிட்டு உள்ளதோடு குறைந்தது இரண்டு அல்லது மூன்று அப்டேட்டுகளை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement