• Jan 19 2025

சாப்பாட்டுக்கும் தங்குவதற்கும் பணம் கொடுத்த கதிர்.. அப்பா பாண்டியன் கேட்ட அதிர்ச்சி கேள்வி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் தன்னை கிச்சன் பக்கம் வர வேண்டாம் என்று தங்கமயில் கூறியதை நினைத்து கோமதி புலம்பி கொண்டிருக்கும் நிலையில் மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் ஆறுதல் கூறுகின்றனர்.

’இப்போது தான் கல்யாணம் ஆகியது, அதனால் புதிதாக சில சில நாட்கள் அப்படித்தான் இருப்பார்கள், போக போக சரியாகும்’ என்று கூறுகின்றனர். இந்த நிலையில் தான் தங்கமயில் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் கோவிலுக்கு போகிறேன் என்று பாண்டியனிடம் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். அம்மாவிடம் சொல்லிவிட்டு செல்கிறேன் என்று சரவணன் கூறும்போது, ’நான் சொல்லிக்கிறேன் நீ கிளம்பு’ என்று கூறுகிறார்.

இருவரும் போனவுடன் கோமதி மீண்டும் புலம்ப ஆரம்பிக்கிறார். ’எங்கே போக வேண்டும் என்றாலும் சரவணன் என்னிடம் அனுமதி கேட்டு தான் போவான், ஆனால் இன்று பொண்டாட்டி வந்தவுடன் என்னிடம் சொல்லாமல் போகிறான்’ என்று அழுகிறார். அவரை மீண்டும் மீனா மற்றும் ராஜி தேற்றுகின்றனர்.



 நாங்கள் இருவரும் உங்களிடம் சொல்லிவிட்டு தானே எந்த வேலையும் செய்கிறோம், புதிதாக கல்யாணம் ஆனவர்கள் சில நாட்கள் அப்படித்தான் இருப்பார்கள், ஒரு வாரம் கழிந்த உடன் சரியாகிவிடும் என்று கூறுகின்றனர். ஆனாலும் என்னுடைய பிள்ளைகள் இப்படி இருப்பார்கள் நான் என்று நினைக்கவே இல்லை என்று கோமதி புலம்பி கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் பாண்டியன் கடைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் தங்கமயில் திடீரென வந்து ’கடையில் நிறைய வேலைகள் இருந்தால் நான் வேண்டுமானால் வரட்டுமா’ என்று கேட்க, ’அதெல்லாம் வேண்டாம், கடையை நாங்க பார்த்துக் கொள்கிறோம் ’என்று பாண்டியன் கூறுகிறார்.  கடைக்கு வரட்டுமா என தங்கமயில் கேட்டது சுற்றி உள்ளவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில் திடீரென ’அப்பா இந்தாங்க பணம்’ என்று பாண்டியனிடம் கதிர் பணம் கொடுக்க அனைவரும் அதிர்ச்சியுடன் அவரை பார்க்கிறார்கள்.  அப்போது  சரவணன் ’எதற்காக அப்பாவிடம் பணம் கொடுக்கிறாய்’ என்று கேட்க போது ’நானும் ராஜியும் இந்த வீட்டில் தங்கியிருக்கிறோம், சாப்பிடுகிறோம், அதற்குத்தான் இந்த பணம், என சொல்ல உன்னிடம் யார் பணம் கேட்டார்கள் என கோமதி கேட்க, ’நீயே ஒரு தண்டச்சோறு இப்ப நீ ஒரு பொண்ண வேற கூட்டிட்டு வந்திருக்கியா என யார் கேட்டார்கள் என்று தெரியாதா’ என பதிலடி கூறுகிறார்.

அப்போது பாண்டியன் ’எவ்வளவு பணம் இருக்கிறது’ என்று கேட்க ’6000’ என கதிர் கூறுகிறார். அப்போது பாண்டியன் ’ஒரு வீட்டில் ரெண்டு பேர் தங்குவதற்கும் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் எவ்வளவு செலவாகும் என்று கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement