• Jan 19 2025

’நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட.. பிக்பாஸ் ஷிவானியை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய திரையுலகம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்தாலும் தற்போது ஒட்டுமொத்தமாக திரையுலகம் அவரை ஒதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ’பகல் நிலவு’ என்ற தொடரில் நடித்த ஷிவானி நாராயணன் அதன் பிறகு ’சரவணன் மீனாட்சி’ ’ராஜா ராணி’ ’கடைக்குட்டி சிங்கம்’ ’ரெட்டை ரோஜா’ போன்ற சீரியல்களில் நடித்தார்.

அதன் பின்னர் அவர் இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து பிரபலமானதை அடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் 98 நாட்கள் தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினார் என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ ஆர்ஜே பாலாஜி நடித்த ’வீட்டுல விசேஷம்’ விஜய் சேதுபதி நடித்த ’டிஎஸ்பி’ வடிவேலு நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் அவருக்கு கிடைத்த கேரக்டர்கள் எல்லாம் சின்ன சின்ன கேரக்டர் தான்.

இந்த நிலையில் திடீரென அவரது உடல் எடை அதிகரித்ததை அடுத்து, வாய்ப்பு கேட்க போன இடத்தில் எல்லாம் முதலில் வெயிட்டை குறைத்துவிட்டு வா, அதன்பிறகு தான் வாய்ப்பு என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் அவரை ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தான் உடலை குறைத்து ஸ்லிம் ஆகி சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன் என்று தீர்மானம் எடுத்து ஜிம்முக்கு சென்று வருகிறார் ஷிவானி. இப்போது அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகிவிட்ட பிறகும் அவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் இன்ஸ்டாகிராமில் கிளாமரில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஷிவானிக்கு கிளாமர் கைகொடுத்து சினிமா வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement