பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்திலின் முடிவைக் கேட்ட சரவணன் கொஞ்சம் நிதானமா இருடா.. அவசரப்படாத என்று சொல்லுறார். பின் கோமதி இந்த வீட்டில உனக்கு என்ன பிரச்சனை என்று சொல்லு அதை நான் சரி செய்து தாறன் என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் கோபமாக அவனுக்கு பிடிச்ச மாதிரியே வெளியில போய் வாழட்டும் என்கிறார். இதனை அடுத்து செந்தில் தன்னால இங்க சகிச்சுக் கொண்டெல்லாம் இருக்க முடியாது நான் போக போறேன் என்று பாண்டியன் கிட்ட சொல்லுறார்.
அதைக் கேட்ட பாண்டியன் போற இடத்தில ஏதும் பிரச்சனை வந்தால் அப்பா என்று கூப்பிட்டுக் கொண்டு வரக்கூடாது என்கிறார். அதுக்கு செந்தில் நான் எதுக்காக உங்க கிட்ட வரப்போறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். அதனை அடுத்து மீனா பாண்டியனை தனியா கூப்பிட்டு செந்திலுக்கு நான் எவ்வளோ தடவை சொல்லிடடேன் ஆனா அவர் கேக்கிறார் இல்ல நான் என்ன செய்றது என்று சொல்லி அழுகிறார்.
அப்புடியே ரெண்டு பேரும் கொஞ்ச தூரம் கதைச்சுக் கொண்டு நடந்து போறார்கள்... மறுபக்கம் கோமதி செந்திலை நினைத்து அழுது கொண்டே இருக்கிறார். அந்தநேரம் பார்த்து செந்தில் கோமதி அழுகிறதை கூட கவனிக்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த கோமதி கோபப்படுறார். பின் செந்தில் கோமதியைப் பார்த்து ட்ராமா போடாமல் இருங்க என்கிறார்.
இதனைத் தொடர்ந்து செந்தில் கோமதியையும் புருஷனோட டார்ச்சரில இருந்து தப்பிக்கிறதுக்கு என்னோட வீட்டில வந்திருங்க என்கிறார். அதைக் கேட்ட கோமதி ஷாக் ஆகுறார். மேலும் என்னோட புருஷன் மேல பழி சொல்லாத என்கிறார். பின் கதிர் கோமதிக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!