• Jan 19 2025

ஜெனியால் பாக்கியா வீட்டில் நடந்த பஞ்சாயத்து..! ராமமூர்த்தியின் அஸ்தியை வாங்கிய கோபி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இரவு முழுவதும் செழியன், எழில் தூங்காமல் அழுது கொண்டிருக்க, தாத்தா கதிரையிலிருந்து எழிலை தூங்க சொல்வது போல் நினைத்து அழுகின்றார்.

அதன் பின்பு மறுநாள் காலையில் பாக்கியா வெளியே வரும்போது ஹாலில் அனைவரும் படுத்திருக்கின்றார்கள். அப்போது ராமமூர்த்தி அவர்களை பார்ப்பது போல காட்டப்படுகின்றது. இதனால் பாக்கியா மாமா என்று ராமமூர்த்தி இருக்கும் கதிரையை  பிடித்து அழுகின்றார்.

இன்னொரு பக்கம் ஜெனியின் அப்பா, அம்மா ஜெனி கர்ப்பமாக இருப்பதால் கொஞ்ச நாளைக்கு  வீட்டுக்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதாக சொல்ல, பாக்கியாவும் அதுதான் சரி என்று சொல்லி ஜெனியை போக சொல்லுகின்றார். சரியென போக வெளிக்கிட்டு ஈஸ்வரிடம் சொல்ல போக, அவர் அழுது கொண்டிருப்பதை பார்த்து மனம் கேட்காமல் அப்படியே வந்து விடுகின்றார்.

அதன் பின்பு தனது அப்பா அம்மாவிடம் நான் எங்கேயும் வரவில்லை. இங்கேயே இருக்கின்றேன் என்னை விட்டு விடுங்கள் என்று சொல்ல, அவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து இறுதியில் சரியென விட்டு விடுகின்றார்கள்.


இன்னொரு பக்கம் கோபி காலையில் எழும்பாமல் இருக்க ராதிகாவும் அப்படியே விட்டு விடுகின்றார். அதன் பின்பு நீங்கள் இன்றைக்கு கிச்சனுக்கு போக வேண்டாம் என்று சொல்கின்றார்.

இதைத்தொடர்ந்து எழிலும் செழியனும் ராமமூர்த்தியின் அஸ்தியை கரைப்பதற்காக சமாதிக்கு வந்து அஸ்தியை எடுத்துச் செல்கின்றார்கள். அப்போது கோபியும் ராதிகாவும் வந்து ராமமூர்த்தி அஸ்தியை கேட்க, அவர்கள் இப்போது தானே கொடுத்து விட்டோம் என்று சொல்லவும் எங்களுக்கும் வேண்டும் என்று கேட்க, அவர்களும் கொடுத்து அனுப்புகின்றார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement