• Apr 07 2025

இனியாவின் கலியாணத்தில் நடக்கும் சூழ்ச்சி..!சுதாகரின் மாஸ்டர் பிளானில் சிக்கிய பாக்கியா...!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

பாக்கியாலட்சுமி சீரியலில் இன்று, எழில் இனியாவப் பாத்து அப்பா எப்ப ஹாஸ்பிடலில இருந்து வருவார் என்று கேக்கிறார். அதுக்கு இனியா இண்டைக்கு வந்திருவார் என்று சொல்லுறார். மேலும் அப்பாக்கு உடம்பு சரியில்ல என்று தான் அங்க போனேன் ஆனால் அங்க வச்சும் என்னோட கலியாணத்தைப் பற்றித் தான் கதைக்கிறார்கள் என்று சொல்லுறார். இதைக் கேட்ட பாக்கியா நீ தெளிவா ஒரு முடிவெடுத்து அந்த முடிவில உறுதியா இருக்கோணும் என்கிறார்.

அதைத் தொடர்ந்து எழில் இனியாவப் பாத்து உன்ன எமோஷனலாப் பேசி கலியாணத்துக்கு ஒத்துக்க வைக்கப் பிளான் பண்ணுறாங்க என்று சொல்லுறார். மேலும் பாக்கியா இனியாவப் பாத்து அடுத்தவங்களோட சந்தோசத்துக்காக கலியாணம் பண்ணாத என்று சொல்லுறார். அதனை அடுத்து இனியா கோபியைப் பாத்து நான் இன்னும் கொஞ்சம் படிக்கோணும் என்று சொல்லுறார்.



இதைக் கேட்ட கோபி இனியாவைப் பாத்து நீ கலியாணம் பண்ணினா ரொம்பவே நல்லா வாழமுடியும் என்று சொல்லுறார். அத்துடன் ஈஸ்வரியும் இனியாவைப் பாத்து ஆகாஷோட பழகினத மறந்திட்டு நிதீஷை கலியாணம் செய் என்று சொல்லுறார். அப்புடியே கதைச்சுக் கொண்டிருக்கும் போது கோபி நெஞ்சு வலிக்குது என்று சொல்லுறார்.

இதனை அடுத்து ஈஸ்வரி இனியாவைப் பாத்து கோபிக்கு மட்டும் ஏதாவது நடந்தால் நான் உன்ன மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லுறார். பின் சுதாகரோட மனைவி சுதாகரைப் பாத்து என்னோட தம்பி கொண்டுவந்த ஒருத்தரையும் உங்களுக்குப் பிடிக்கல எப்புடி இனியாவ மட்டும் பிடித்தது என்று கேக்கிறார். மேலும் நிதீஷ் ரெஸ்டாரெண்டுக்காகத் தானே எனக்கு கலியாணம் பண்ணி வைக்கிறீங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.



Advertisement

Advertisement