தமிழ் சினிமாவில் சமூகநீதி, அரசியல், மற்றும் அடக்குமுறைகளை எதிர்த்து பேசும் புது தலைமுறை இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவராகக் கருதப்படுகிறார் பா.ரஞ்சித்.
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ போன்ற பல திரைப்படங்கள் மூலம், பா.ரஞ்சித் தனது தனிப்பட்ட இயக்கத் துணிச்சலை நிலைநாட்டியவர்.
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான சிந்தனையை கொண்டு வருபவர், தற்போது தனது வாழ்க்கையின் முக்கியமான ஒரு கட்டத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
பா.ரஞ்சித் கூறியதாவது, “சின்ன வயசில இருந்தே எனக்கு ஒரு கனவு இருந்தது. நான் டாக்டர் ஆகவேண்டும் என்று எண்ணினேன். அதற்காக 11ம் வகுப்பு வரை நான் நன்றாகவே படித்தேன். 12ம் வகுப்பு படிக்கும் போது சரியான guidance இல்லாமல் படிப்பை விட்டுட்டு வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்தி 12ம் வகுப்பு fail ஆகிவிட்டேன். என்ர அப்பா நான் 12ம் வகுப்பு fail ஆனதுக்கு ரொம்பவே கவலைப்பட்டார். ரொம்ப எதிர்பார்த்தார் நான் நல்ல மார்க் எடுப்பேன் என்று அவர் உடைந்த குரலில் பேசினது இப்பவும் நினைவில் இருக்கு.." என்றார்.
இந்த உருக்கமான வார்த்தைகள், தற்போது ஒரு வெற்றிகரமான இயக்குநராக இருக்கும் போதும், அவருக்குள் இன்னும் ஒரு பழைய நினைவாக இருக்கின்றது என்பதை காட்டுகிறது.
Listen News!