• Jan 19 2025

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று... பிக் பாஸ் பூர்ணிமாவின் வைரல் வீடியோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

பிளான் பண்ணி பண்ணனும்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் பூர்ணிமா ரவி. இவர் சமூக வலைதள பக்கங்களில் கலகலப்பான வீடியோக்களை வெளியிட்டு யூட்யூப் பிரபலமாகவும் திகழ்ந்து வந்தவர். இவருக்கு என்று தனித்தனி பேன்ஸ் பேஜும் காணப்படுகின்றன.


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கு பற்றி அதன் இறுதியில் 16 லட்சம் பண பெட்டியுடன் வெற்றிகரமாக வீடு சேர்ந்தார் பூர்ணிமா. இதை தொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' என்ற படமும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அன்னப்பூரணி' படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.


இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா, அடிக்கடி போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதை வழமையாகக் கொண்டிருந்தார். அதன்படி தற்போது  பாலைவனம் ஒன்றில் இருப்பது போன்ற அழகிய வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். 


Advertisement

Advertisement