• Jan 19 2025

விவாகரத்து வழக்கு மட்டுமல்ல, இன்னொரு வழக்கு.. தனுஷ் அதிர்ச்சி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சட்டப்படி பிரிவதற்கு விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பதும், இந்த வழக்கு வரும் அக்டோபர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அன்றைய தினம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தனுஷ் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக கூறப்படுவது தனுஷ் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனுஷ் தற்போது ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியில் உருவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கும் என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் பிச்சைக்காரன் தோற்றத்தில் தனுஷ் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.



இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ’குபேரா’ படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த டைட்டிலை ஏற்கனவே ஒரு தயாரிப்பாளர் தெலுங்கானா திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த டைட்டிலை பயன்படுத்தும் தனுஷ் மீது வழக்கு தொடர் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

திரைப்பட வர்த்தக சபையில் முதலில் அவர் முறையிட உள்ளதாகவும் அதற்கு சரியான பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விவாகரத்து வழக்கு மட்டுமின்றி இன்னொரு வழக்கையும் சந்திக்க தனுஷ் தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்படுவதால் அவரது தரப்பில் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement