• Jan 18 2025

கெட்ட வார்த்தை பேசி படம் நடிப்பியா? விழா மேடையில் விஷாலுக்கு செருப்படி கொடுத்த சித்தார்த்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் சித்தார்த் இயக்கத்தில், சித்தார்த் நடித்து வெளியான திரைப்படம் தான் சித்தா. இந்த திரைப்படம் பெண்  குழந்தைகள் வளர்ப்பில் உள்ள சிக்கல்களையும், பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் அருமையாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.

அண்மையில் சித்தா படத்திற்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் நடிகர் சித்தார்த் பல விஷயங்களை ஓபனாக பேசி பகிர்ந்துள்ளார். சித்தார்த் பேசியது ஒரு பக்கம் நியாயமாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் இந்த விடயம் சர்ச்சை  தருவதாக காணப்படுகிறது.

அதாவது, குறித்த விருது விழாவில் அனிமல் படத்தை பார்க்கும் போது ஆணாதிக்கம் காணப்படுகிறது. பெண்கள் இழிவு படுத்தப்பட்டனர். ஆனால் இதைப் பார்க்க முடிந்த ஆண்களால் 'சித்தா' படத்தை ஏன் பார்க்க முடியவில்லை என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.


அத்துடன் அனிமல் படத்தை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களால் கூட பார்க்க முடியாது. ஆனால் அந்த படத்திற்கு பல விருதுகளையும் கொடுத்து கொண்டாடுகிறார்கள். வன்முறையாக படம் எடுக்கும் ஒருவர் தனது துறையில் எங்கு இருந்தாலும் நான் அவரை விமர்சிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் நடிக்கும் ரத்னம் படத்திலும் விஷாலும், வில்லனும் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என விஷாலையும் வெளுத்து வாங்கியுள்ளார் சித்தார்த்.


அதன்படி, படத்தில் யதார்த்தமாக காட்டுவது என்ற நோக்கத்தில் பலரும் கெட்ட வார்த்தை பேசுகிறதாக படத்தை எடுக்கிறார்கள். இது வெற்றிமாறன் படத்திலும், ஹரி படத்திலும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பேசுவது ஹீரோயிசம் ஆகவே பார்க்கப்படுவது தான் வேதனை. விஷாலிலும் மாஸ் ஹிட் படங்களை கொடுத்து நீண்ட நாளாகிவிட்டது. அதனால் தான் மீண்டும் தாமிரபரணி போல ஹிட் கொடுக்க ஹரியுடன் கை கோர்த்துள்ளார்.

இவ்வாறு, கெட்ட வார்த்தையிலான வசனங்களை பேசுவது அனிமல் படத்திற்கு மட்டுமில்ல விஷால் படமான ரத்னம் படத்திற்கும் பொருந்தும் என கூறி விஷாலுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.  

Advertisement

Advertisement