• Oct 08 2024

மீண்டும் இணைந்த ‘ஆபீஸ்’ சீரியல் கார்த்திக் - ராஜி.. கண்கொள்ளா காட்சி..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ சீரியலில் கார்த்திக் மற்றும் ராஜி கேரக்டரில் நடித்திருந்த கார்த்திக் ராஜ் மற்றும் ஸ்ருதி ராஜ் ஆகிய இருவரும் தற்செயலாக படப்பிடிப்பின் போது சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் கார்த்திக் ராஜ் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம்’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்தது. அதேபோல் நடிகை ஸ்ருதி ராஜ்,  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’லட்சுமி’ என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ’கார்த்திகை தீபம்’ மற்றும் ’லட்சுமி’ ஆகிய இரண்டு சீரியல்களின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் அருகருகே நடந்த நிலையில் கார்த்திக் ராஜ் மற்றும் ஸ்ருதி ராஜ் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பை அடுத்து இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் ஸ்ருதி ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவு செய்து கார்த்திக் - ராஜி அனைத்து ரசிகர்களுக்கும் என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பலர் இந்த புகைப்படத்திற்கு நாங்கள் முதன்முதலாக பார்த்த காதல் ஜோடி கார்த்திக் - ராஜி தான் என்றும் இருவருக்கும் எங்களது வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement