• Jan 16 2026

’கோட்’ படத்திற்கும் இசை வெளியீட்டு விழா கிடையாதா? விஜய் வைத்த சர்ப்ரைஸ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற நிலையில் ’கோட்’ படத்திற்கும் இசை வெளியீட்டு விழா கிடையாது என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் அதிருப்தியில் இருக்கும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் ’கோட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.



ஆனால் ’கோட்’ படத்திற்கு இசை வெளியீட்டு விழா தேவையில்லை என்று விஜய் கூறியதாகவும் ஆகஸ்ட் மாதத்தில் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த இருப்பதால் அடுத்தடுத்து இரண்டு விழாக்கள் தேவையில்லை என்று அவர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே அவர் ’கோட்’ படம் பற்றி சில விஷயங்களை பேசுவார் என்றும் அதுவே போதும் என்றும் அவர் கூறியிருப்பதை அடுத்து தயாரிப்பது தரப்பு வேறு வழியின்றி அதற்கு ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ’கோட்’ படத்தின் வெற்றி விழா கண்டிப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement