• Jan 19 2025

பாத்ரூம் வசதி கூட இல்லையா? எனக்கு இன்பெக்‌ஷன் ஆகிடுச்சு! அம்மு அபிராமி ஆவேசம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கண்ணகி படத்தில் நடித்துள்ள அம்மு அபிராமி அண்மையில் ஆவேசமாக பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் கம்மி பட்ஜெட்டில் படம் எடுக்கிறோம் என டார்ச்சர் செய்யும் தயாரிப்பாளர்களையும் அவர்களுக்கு துணை போகும் இயக்குநர்களையும் வச்சு விளாசி உள்ளார்.

நடிகை அம்மு அபிராமி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களிலும், சிறு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களிலும் நடித்து வந்தார். இதன் காரணமாக அவர் சந்தித்த பிரச்சனைகளை எடுத்து விளக்கியுள்ளார்.

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மறைந்த நடிகர் மயில்சாமி, மெளனிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணகி திரைப்படம் இன்று  திரையரங்குகளில் வெளியாகிறது. 


இந்நிலையில், அதற்காக பேட்டியளித்த நடிகை அம்மு அபிராமி பேசும் போது, பெண்களுக்கு உடை மாற்றுவதற்கு ஒரு இடம் இருக்காது என்றும் பாத்ரூம் போக கூட வெளி இடங்களில் வசதி செய்யாமல் அப்படி என்ன இதுக்கு ஷூட்டிங் நடத்தி சம்பாதிக்க நினைக்கிறாங்கனே தெரியல என்றும் எதையாவது வெளிப்படையாக சொன்னால் இவ ரொம்ப திமிரு புடிச்சவ என முத்திரை குத்தி ஒதுக்கி வச்சிடுவாங்க என குமுறியுள்ளார்.

அத்துடன்,  நடிகைகளுக்கு ஒரு பாத்ரூம் கூட அரேஞ்ச் பண்ண முடியாத நீயெல்லாம் ஏன் படம் எடுக்குற என்று தயாரிப்பாளர்களை கேட்டு வெளுத்து விட்டார்.

இதேவேளை, படப்பிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகளுக்கு பாத்ரூம் வசதி கூட இருக்கிறதா? இல்லையா? என்பதை கூட நடிகர் சங்கம் பார்ப்பது கிடையாதா? என பலரும் விளாசி வருகின்றனர்.

Advertisement

Advertisement